மற்ற வகுப்பினரை விட உயர் குடி வகுப்பினருக்கு மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்ட கட் ஆஃப் 

பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தர்  பணிக்காக நடத்தப்பட்ட முதனிலை தேர்வின் முடிவுகளில் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் எஸ்.சி., எஸ்.டி., பிரிவை விட குறைவாக கணக்கிடப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியில் எழுத்தர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுப்பதற்கான முதனிலை தேர்வுகடந்த ஜூன் மாதம் 22 மற்றும் 23ம் தேதிகளில் நடைபெற்றது. 60 நிமிடங்கள் கால அளவு கொண்ட இந்த தேர்வில்,  ஒருக் கேள்விக்கு ஒரு மதிப்பெண் என்ற வீதத்தில் 100 கேள்விகள் இடம்பெற்றன. இவற்றில் ஆங்கிலத்தில் இருந்து 30 கேள்விகளும்நியூமரிக்கல் எபிலிட்டி பகுதியிலிருந்து 35 கேள்விகளும்ரீசனிங் எபிலிட்டி பகுதியிலிருந்து 35 கேள்விகளும் இடம்பெற்றன. 8 ஆயிரத்து 300க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியுடையவர்களை தேர்ந்தெடுக்க இந்த தேர்வு நடைபெற்றது.

இத்தேர்வின் முடிவுகள் நேற்றிரவு வெளியாகியுள்ள நிலையில், ஒவ்வொரு பிரிவினருக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் பழங்குடியினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 53 புள்ளி  ஏழு 5 எனவும்எஸ்.சி.ஓ.பி.சி.பிரிவுகளுக்கான கட் ஆஃப் 61 புள்ளி இரண்டு 5 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட முன்னேறிய வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவோருக்கான கட் ஆஃப் மதிப்பெண்சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, EWS  எனப்படும் பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான கட் ஆஃப் 28 புள்ளி 5 என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பிரிவில் குறைவான தேர்வர்கள் விண்ணப்பத்திருந்ததால் இப்படி குறைவான கட் ஆஃப் நிர்ணயமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், 10 சதவீதஇடஒதுக்கீட்டை பெறுவோருக்கான கட் ஆஃப் மார்க் மற்ற வகுப்பினரை விட மிக மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Posts