மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் நாளை முதல் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படும்

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் நாளை முதல் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

         இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மலேசியா மணல் இணையதளம் மூலம் விற்பனை செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும், உச்ச  நீதிமன்றம் நிர்ணயித்துள்ள விலைக்கு மணல் விற்பனை செய்யப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், நாளை விற்பனை தொடங்குவதாக குறிப்பிட்ட அவர், இடைத்தரகர்கள் இல்லாமல் பொதுமக்களே இணையதளம் மூலம் வாங்கலாம் என கூறினார். ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் விசாரணைக்குழுவிடம் மனு அளிக்க வந்த யாரும் தடுத்து நிறுத்தப்படவில்லை எனவும், பொதுமக்கள் பாதுகாப்பு கருதியே அதிகமான போலீசார் குவிக்கப்பட்டிருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.  வீரபாண்டியன் பட்டினத்தில் 1கோடியே 34லட்சம் மதிப்பீட்டில், சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் எனவும், இசைமேதை நல்லப்பசாமியின் இல்லத்தில் அவரது சிலை வைப்பதற்காக இருபது லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி தெரிவித்தார்.

Related Posts