மலேசியாவில் நாளை பொதுத்தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்

 

 

மலேசியாவில் நாளை பொதுத்தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

மலேசியாவின் 13-வது நாடாளுமன்றம் கடந்த 7-ம் தேதி கலைக்கப்பட்டது. இது தொடர்பான அறிவிப்பை மன்னரின் ஒப்புதலுக்கு பிறகு பிரதமர் நஜீப் துன் ரசாக் வெளியிட்டார். இதைத்தொடர்ந்து மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தல் நாளை  நடைபெறும் என தேர்தல் ஆணையர் முகம்மது ஹசிம் பின் அப்துல்லா அறிவித்துள்ளார். கடந்த 2013-ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் நஜீப் துன் ரசாக் தலைமையிலான கூட்டணி கட்சி 133 இடங்களில் வெற்றி பெற்றது. ரசாக் மீது பெருமளவு ஊழல் குற்றசாட்டுகள் எழுந்துள்ளதால், பொதுத்தேர்தலை எதிர்கொள்ளவதில் கடும் சவாலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தம் 222 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 587 மாகாண தொகுதிகளுக்கு நடைபெற உள்ள .பொதுத்தேர்தலில் தேர்தலில் மொத்தம் 14 கோடியே 9 லட்சத்து 40 ஆயிரத்து 627 மலேசியர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுஉள்ளனர்”

Related Posts