மலேசியா பிரதமர் மகாதீர் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு

மலேசியா சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் மகாதீர் முகமதுவை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார்.

மலேசியா : மே-31

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 5 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, இன்று காலை ஜகார்தாவில் இருந்து தனி விமானம் மூலம் கோலாலம்பூர் சென்றடைந்தார். அங்கு பிரதமர் மோடிக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் புத்ரஜயாவில் பிரதமர் மோடி, மலேசிய பிரதமர் மகாதீர் முகம்மதுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். புதிய பிரதமராக பதவியேற்ற அவருக்கு மோடி வாழ்த்து தெரிவித்தார். இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாகவும், வர்த்தகம் மற்றும் முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. மலேசியா பிரதமர் உடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிப்பதாகவும், தமக்கு சிறப்பான வரவேற்பு அளித்தமைக்காக நன்றி கூறிக் கொள்வதாகவும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். எதிர்காலத்தில் இந்தியா – மலேசியா இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆக்கப்பூர்வ விவாதம் மேற்கொண்டதாகவும் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Related Posts