மலேசியா – மகாதிர் முகமது தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது

மலேஷியத் தேர்தலில் எதிர்பாராத திருப்பமாக மகாதிர் முகமது தலைமையிலான எதிர்கட்சி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது.

மலேசியா : மே-10

222 உறுப்பினர்களைக் கொண்ட மலேஷிய நாடாளுமன்றத்திற்கு நேற்று பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் நஜீப் ரஜாக்கின் ஆளும் பரிசான் நேஷனல் கட்சிக்கும், எதிர்கட்சித் தலைவரான மகாதிர் முகமது தலைமையிலான பகாரன் ஹராப்பன் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தத் தேர்தலில் 69 சதவீதம் மக்கள் வாக்களித்தனர். இதையடுத்து, நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஆட்சி அமைக்கத் தேவையான 112 இடங்களுக்கு பதில் மகாதிரின் கட்சி 115 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  சுதந்திரமடைந்து 61 ஆண்டுகளுக்கு பின், மலேசியாவில் முதன்முறையாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. 92 வயது நிரம்பிய மகாதிர்  முகமது பிரதமராக பதவியேற்கவுள்ளார். இதன்முலம், உலகிலேயே மிகவும் வயதான பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Related Posts