மலேசிய பிரதமராக மகாதிர் முகம்மது பதவியேற்றுக் கொண்டார்

 

 

மலேசியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்துபிரதமராக மகாதிர் பதவியேற்றுக் கொண்டார்.

222 உறுப்பினர்களைக் கொண்ட மலேஷிய நாடாளுமன்றத்திற்கு கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற பொதுத்தேர்தலில், 60 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பாரிஸன் நேஷனல் கூட்டணி முதல்முறையாக தோல்வியை சந்தித்தது. பிரதமராக இருந்த நஜீக் ரஸாக்கை எதிர்த்துப் போட்டியிட்ட மகாதிர் முகமது வெற்றி பெற்றார். இதையடுத்து, கோலாலம்பூரில் உள்ள அரண்மனைக்கு தமது மனைவியுடன் வந்த மகாதிர், அடுத்த ஆட்சியை அமைப்பது குறித்து மன்னர் முகமதுவை சந்தித்துப் பேசினார். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் 7வது பிரதமராக  மகாதிர் பதவியேற்றார். அவருக்கு மன்னர் முகமது பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

Related Posts