மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் 100 கிலோ தங்கம் பறிமுதல்

 

 

மலேசிய முன்னாள் பிரதமர் வீட்டில் 100 கிலோ தங்கம்,  171 கோடி ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்  கட்சி, சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது. எதிர்க்கட்சி கூட்டணி, ஆட்சியை பிடித்ததையடுத்து, மகாதீர் முகமது பிரதமராக பதவி ஏற்றார். தை தொடர்ந்து முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது ஊழல் புகார் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோலாலம்பூரில் பெவிலியோன் அடுக்குமாடி குடியிருப்பில் ரசாக்குக்கு சொந்தமான 2 வீடுகளில் காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது 72 பைகளில் பதுக்கி வைத்திருந்த தங்க கட்டிகள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் எடை 100 கிலோ என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 171 கோடி ரூபாய் ரொக்க பணமும்விலை உயர்ந்த பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அவை அனைத்தும் 350 பெட்டிகளில் அடைக்கப்பட்டு 5 லாரிகளில் ஏற்றிச் செல்லப்பட்டது.  

Related Posts