மலையப்ப சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

திருப்பதி ஏழுமலையான் கோவில் வசந்தவிழாவின் 7வது நாளான இன்று மலையப்ப சுவாமி சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

      திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் வசந்த விழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து மலையப்ப சுவாமி வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். வசந்த விழாவின் 7வது நாளான இன்று காலை உற்சவர் மலையப்ப சுவாமி, சூரிய நாராயணர் அலங்கார திருக்கோலத்தில் சர்வ திருவாபரணம் பூண்டு, தங்க சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தீப,தூப,நைவேத்தியங்கள் நடத்தப்பட்டன. பின்னர், கோவிலின் மாட வீதிகளில் பக்தர்களின் பல்வேறு வகையான கலைநிகழ்ச்சிகளுடனே வலம் வந்த மலையப்ப சுவாமியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Related Posts