மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும்

மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

      சென்னை தேனாம்பேட்டையில்உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். பின்னர், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சனாதன பயங்கரவாத போக்கை கண்டித்து டிசம்பர் மாதம் 10ந் தேதி  நடைபெறும் தேசம் காப்போம் மாநாட்டிற்கான அழைப்பிதழை ஸ்டாலினிடம் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திருச்சியில் நடைபெறும் தேசம் காப்போம் மாநாட்டில் பங்கேற்க  ஸ்டாலின் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறினார். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஸ்டாலினிடம் விரிவாக ஏதும் பேசவில்லை எனவும், திருப்பரங்குன்றம்,திருவாரூர் இடைத்தேர்தல் குறித்து விவாதித்தாகவும் அவர் கூறினார். வானிலை மையம் பேரிடர் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளதை சுட்டிக்காட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர் கால அடிப்படை  தமிழக அரசு எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related Posts