மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னையில் பரவலாக நேற்று மாலை இடி, மின்னலுடன் மழை பெய்தது. இன்றும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகரில் நேற்று மாலையில் இடி மின்னலுடன்  பரவலாக மழை பெய்ததால், வெப்பம் குறைந்து இதமான சீதோஷண நிலை காணப்பட்டது.

காற்றின் வேகமாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தமட்டில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மத்திய  மற்றும்  தெற்கு  வங்க  கடல்  பகுதிகளில்  மணிக்கு  45  முதல் 55  கிலோ மீட்டர்  வேகத்தில்  காற்று  வீசுவதால்  அந்த    பகுதிகளுக்கு மீனவர்கள்   செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது

Related Posts