மழை வேண்டி அதிமுக அமைச்சர்களின் சிறப்பு யாகம்

தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்

 

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர் பஞ்சத்தை போக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில்  மழைவேண்டி அந்தந்த மாவட்டங்களில், அமைச்சர்கள், இன்று சிறப்புபூஜை செய்ய வேண்டும் என்று அதிமுக தலைமை உத்தரவிட்டு உள்ளது. இதன்படி சென்னை புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயிலில் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் மழை வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர்,  யாகம் நடத்தினால் மழை பொழியும் என்பது நம்பிக்கைஎன்றும் எனவே  தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கோயில்களில் யாகம் நடத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

. மழைநீர் சேகரிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை மக்கள் தற்போது உணர்ந்திருப்பர் என்றும்  ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால் அது 10 பேருக்கு ஆக்சிஜன் தரும் என்றும் அவர் குறிப்பிட்டார். தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவிற்கு வந்தால் வரவேற்போம் என்ற அமைச்சர்,  சசிகலா மற்றும் அவரது குடும்பத்தாரை தவிர வேறு யார் அதிமுகவிற்கு வந்தாலும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை கொள்கை அடிப்படையில் அதிமுக ஆதரிப்பதாகவும், , நடைமுறை சிக்கல்களை தீர்த்த பிறகு அதனை அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

 

 

இதேபோல், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் சரவணப் பொய்கையில்  மழை வேண்டி வழிபாடு நடைபெற்றது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜு, மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பச்சமலையில் அமைந்துள்ள சுப்பிரமணியர் முருகன் கோயிலில்அமைச்சர் செங்கோட்டையன் மழை வேண்டியும் வருண பகவான் அருள்வேண்டியும் யாகபூஜையில் ஈடுபட்டார்

 

Related Posts