மஹாளய அமாவாசையை முன்னிட்டு மூதாதையர்களுக்கு திதி கொடுத்தனர்

  மஹாளய அமாவாசையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பல்வேறு புனித தலங்களில் உள்ள நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து, பொதுமக்கள் வழிபட்டனர்.

                மறைந்த மூதாதையர்களுக்கு, மஹாளய அமாவாசை நாட்களில் திதி கொடுத்து, புனித தலங்களில் நீராடினால், பாவ விமோச்சனம் கிடைக்கும் என ஐதீகம். இன்று மாஹாளய அமாவாசை என்பதால், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலின் அக்னி தீர்த்த கரையில் நள்ளிரவு முதல் ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்தனர். 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலையில், ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில், தம்மோடு வாழ்ந்து மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுத்து, தர்ப்பணம் செய்து வழிபட்ட பொதுமக்கள், கடலில் புனித நீராடினர். மேலும், ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடிய பக்தர்கள், சுவாமி-அம்பாள் தரிசனம் செய்து வழிபட்டனர்.

Related Posts