மாட்ரிட் ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் அலெக்சாண்டர் சவேரா

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர் சவேரா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

ஸ்பெயின் : மே-14

மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில், 7ம் நிலை வீரரான ஆஸ்திரியாவின் டொமினிக் தீம், ஜெர்மனியின் அலெக்சாண்டர் சவேராவை எதிர்கொண்டு விளையாடினார். இதில், அபாரமாக ஆடிய சவேரா, 6-க்கு 4, 6க்கு 4 என்ற நேர்செட் கணக்கில் டொமினிக் தீம்மை தோற்கடித்து, பட்டம் வென்றார்.

Related Posts