மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்ட்டிடம் தோல்வி அடைந்தார்.

ஸ்பெயின் : மே-10

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், இங்கிலாந்து வீரர் கைல் எட்முன்ட்டிட் ஆகியோர் விளையாடினர். இதில், ஜோகோவிச், கைல் எட்முன்ட்டிடம் 3-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் 7-5, 6-3 என்ற நேர்செட்டில் நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ்சை தோற்கடித்தார்.

Related Posts