மாணவர்களின் கல்வி கட்டணத்தை அண்ணா பல்கலைக்கழகம் 2 மடங்காக உயர்த்தியுள்ளது

அண்ணா பல்கலைக்கழகம் ஊழியர்களின் சம்பளம், கல்விக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆய்வகங்களுக்கான உபகரணங்கள் வாங்குதல், தண்ணீர், மின்சாரம், பாதுகாப்பு போன்ற பல்வேறு காரணங்களால் அதிகரித்துவரும் செலவினங்களுக்காக தேவைப்படும் நிதியை ஈடு செய்வதற்காக நடப்பு கல்வி ஆண்டு முதல் மாணவர்களின் கல்வி கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் இதற்கு முன்பு 1999-ம் ஆண்டு கல்வி கட்டணத்தை உயர்த்தியிருந்தது. 20 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கிறது. புதிய கல்வி கட்டணம் தற்போது இருக்கும் கட்டணத்தோடு ஒப்பிடுகையில் தோராயமாக 2 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய கட்டண விகிதப்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சுயநிதி படிப்புகளுக்கான கல்வி கட்டணம் 14,665-ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும், ஏரோநாட்டிக்கல் என்ஜினீயரிங் படிப்புக்கான கட்டணம் 9,250-ரூபாயில் இருந்து 21 ஆயிரம் ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

இதேபோல பிற படிப்புகளுக்கான கட்டணம் .8,250-ரூபாயில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாகவும், அண்ணா பல்கலைக்கழகத்தில் அங்கம்வகிக்கும் கல்லூரிகளில் அனைத்து படிப்புகளுக்கான கட்டணம் 8,250-ல் இருந்து 15 ஆயிரம் ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. புதிய கட்டண உயர்வு மாணவர்களையும், பெற்றோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 

Related Posts