மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்,

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் மாணவர் வருகை பதிவு தொடக்க விழா சென்னை அசோக் நகரில் உள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி நடைபெற்றது இதில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வருகைப் பதிவை தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டு தமிழக அரசின் நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு 20 கோடி ரூபாய் அரசு ஒதுக்கியது எனவும், ஆனால் அதில் ஒரு ரூபாய் கூட செலவு செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.கடந்த ஆண்டு அவசர கதியில் கடைசி நேரத்தில் 2 மாதம் மட்டுமே பயிற்சி வழங்கப்பட்டதால் 4 மாணவர்கள் மட்டும் தேர்ச்சி பெற்றதாகவும்,.413 மையங்களில் 26 ஆயிரம் மாணவர்களுக்கு இந்தாண்டு பயிற்சி வழங்கபடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.ஆனால் இந்தாண்டு அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் இருந்து 500 மாணவர்கள் தேர்ச்சி பெற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மாணவர்களுக்கு ஆதார் எண்ணுடன் கூடிய ஸ்மார்ட் கார்டு அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Related Posts