மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்

Want create site? Find Free WordPress Themes and plugins.

 சிபிஎஸ்இ தேர்வில் முதல் இடம் பெற்று குடியரசுத் தலைவர் விருது வாங்கிய மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

             அரியானா மாநிலம் மகேந்திரகார் மாவட்டத்தில் உள்ள குருகிராம் நகரில் வசிக்கும் 19 வயதான மாணவி ஒருவர், சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக குடியரசுத் தலைவர் விருது பெற்றுள்ளார்.

             இந்நிலையில், நேற்று  சிறப்பு பயிற்சி வகுப்புக்குச் என்று விட்டு  வீட்டுக்கு திரும்பிய அந்த மாணவியை வழிமறித்த மூன்று இளைஞர்கள்,  அவரை ஒரு காரில் கடத்திச் சென்று ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியியல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அப்போது அந்தப்பகுதியில் இருந்த சிலரும் அந்த மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த மாணவி சுயநினைவை இழந்த்தால் அச்சமடைந்த அந்த கும்பல், அவரை பேருந்து நிலையத்தில் தள்ளி விட்டுவிட்டு சென்றுள்ளது. தன்னை பலாத்காரம் செய்தவர்கள் அதே ஊரை சேர்ந்தவர்கள் என பெற்றோரிடம் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.  ஆனால் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை அளித்த  புகாரை போலீசார் வாங்க மறுத்து உள்ளனர். இதையடுத்து  காவல்துறை  உயர் அலுவலரிடம் மாணவின் தந்தை புகார் அளித்தார். அந்த புகாரை பதிவு செய்து சம்மந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக உயர் அதிகாரி அனுப்பி உள்ளார்.

              சுட்டுரைப்பக்கத்தில் மாணவியின் தாயார் வெளியிடுள்ள பதிவில், சிபிஎஸ்இ தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக விருது பெற்ற தனது  மகள். ஒரு கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் எனவும், பிரதமர் மோடி, பெண்களை படிக்க வையுங்கள், பெண் குழந்தைகளை  பாதுகாப்போம் என்று கூறியதை சுட்டிக்காட்டி, இதுபோன்ற சூழலில் எப்படி படிக்க வைக்க முடியும் என வினவினார். இது குறித்து போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தனது மகளுக்கு நீதி கிடைக்க வேணும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts