மாநகராட்சி ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

சென்னையில் மின்சாரம் தாக்கி 14 வயதுசிறுவன் மரணமடைந்த விவகாரத்தில், மாநகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை முகலிவாக்கத்தைச் சேர்ந்த தீனா என்ற சிறுவன், தெருவில் நடந்து சென்றபோது, வெளியே நீட்டிக் கொண்டிருந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். தீனாவின் தந்தை அளித்த புகாரின்பேரில் சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் செந்தில், உதவி மண்டலப் பொறியாளா் பாலு ஆகியோர் மீது மாங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் மற்றும் மின்னுற்பத்தி பகிர்மான கழகத் தலைவர் ஆகியோருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில் தோண்டப்பட்ட குழிகளை மூடாமல் இருப்பது மனித உரிமை மீறல் இல்லையா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுப்பட்டுள்ளன. நோட்டீசுக்கு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts