மாநாடு நடத்துவது குறித்து நடிகர் ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை

மாநாடு நடத்துவது குறித்து சென்னையில் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

சென்னை : மே-10

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடிகர் ரஜினிகாந்த்தின் சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மகாலிங்கம், மாநில நிர்வாகி சுதாகர் உட்பட 6 ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் 32 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும்  மன்றத்தின் முதல் மாநாட்டை மதுரையில் நடத்துவதா அல்லது திருச்சியில் நடத்துவதா என்பது பற்றியும் ரஜினி ஆலோசித்ததாக கூறப்படுகிறது. மேலும், உறுப்பினர் சேர்க்கை மற்றும் பூத் கமிட்டி அமைப்பது, இளைஞர்களை அதிக அளவில் மன்றத்தில் சேர்ப்பது உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் உடனான சந்திப்பு ஆக்கப்பூர்வமான சந்திப்பு என ட்விட்டர் பக்கத்தில் ரஜினி பதிவிட்டுள்ளார்.

Related Posts