மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் மன்மோகன்சிங்

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது

அவரது பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. இதையடுத்து மாநிலங்களவைக்கு போட்டியிடுவதற்காக, ஜெய்ப்பூரில் தனது வேட்புமனுவை மன்மோகன் தாக்கல் செய்தார்.

அவரை எதிர்த்து வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என பா.ஜ.க. முடிவு செய்துள்ளதால், மன்மோகன் சிங் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. அசாம் மாநிலத்தில் இருந்து 5 முறை மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், ஆறாவது முறையாக தற்போது மாநிலங்களவை உறுப்பினராகிறார்.

ராஜஸ்தானில் ஏற்கனவே 9 மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்ட பாஜக விற்கு, தற்போது போதிய எம்.எல்.ஏ.க்கள் பலம் இல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Posts