மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மும்பையில் இன்று சந்தித்து பேசினார்

மராட்டிய மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மும்பையில் இன்று சந்தித்து பேசினார்.

மக்கள் உரிமை போராளி ஹென்றி திபேனுக்கு பிரபல வழக்கறிஞர் நானி பல்கிவாலா பெயரில் அமைந்துள்ள விருது மும்பையில் இன்று விழாவில் வழங்கப்படுகிறது. இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு ஹென்றி திபேனின் விடுத்த அழைப்பை ஏற்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மும்மை சென்றார்.  அவருக்கு விமான நிலையத்தில் மும்பை மதிமுக சார்பில் சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனிடையே தனது நீண்ட நாள் நண்பரும்,  மராட்டிய மாநில ஆளுநருமான வித்யாசாகர் ராவை ஆளுநர் மாளிகையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை சந்தித்து பேசினார். ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts