மாநில சுயாட்சி மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும்:மு.க.ஸ்டாலின் 

திருச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், வருகின்ற 18 ஆம் தேதி நடைபெறவிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் மத்தியில் மோடி தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய ஆட்சிக்கு விடை கொடுக்கின்ற தேர்தலாக அமைந்திட வேண்டும் என்று குறிப்பிட்டார். .

மோடியை வீட்டிற்கு அனுப்புகின்ற அதே நேரத்தில், மாநிலத்தில் மோடிக்கு எடுபிடியாக பாஜக ஆட்சிக்கு சேவகனாக, பாஜகவுக்கு அடிமையாக தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமிக்கு  நாம் விடைகொடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த இரண்டு ஆட்சிகளை அப்புறப்படுத்துவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் அதுதான் வருகின்ற 18ஆம் தேதி நடைபெறவிருக்கக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் என்றார். திருச்சி நாடாளுமன்றத் தொகுதியின் காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் திருநாவுக்கரசை கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டுமென என அவர் கேட்டுக்கொண்டார். மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Related Posts