மாயங்கள் நிறைந்த மாயன் பிரமீடுகள்

மாயன் காலண்டர் பற்றி நமக்கு அதிகம் தெரியும். இன்றைய மேற்கத்திய காலண்டர்களின் மூல காரணமே மாயன் காலெண்டர் தான். அவர்கள்தான் முதன் முதலில் ‘0’ என்பதை பயன்படுத்தியுள்ளனர். இவர்களது முக்கிய கோவில், அவர்களது தலைநகரான ‘பெரு’வில் உள்ளது. அது, “சிச்சன் இட்சா” (Chichen Itza) இல் உள்ள “குகுல்கன் பிரமிடு” ( Kukulkan  Pyramid).

“சிச்சன் இட்சா” தான் மாயன் நாகரீகத்தின் மிகப் பெரிய நகரமாக இருந்தது. சிச்சன் இட்சா என்றால் மாயன் நாகரீகத்தின் அர்த்தம் படி, “இட்சா கிணற்றின் வாய் மேல் இருக்கும் இடம்” என்று அர்த்தம். இரண்டு புதக் கிணற்றிற்கு இடையில் அமைந்துள்ள இந்த கோவிலில் நரபலி முக்கிய சடங்காக இருந்து வந்துள்ளது. ஆங்கில படம் ‘அபோகலிப்டோ’ இந்த மாயன் நாகரீகத்தின் அடைப்படையில் தான் உருவாக்கப்பட்டது.

இரண்டு புதைக் கிணறுகளில் ஒன்று குடிநீர் தரும் கிணறாகவும், ஒன்று நரபலியிட்டப் பிணங்களை விழுங்கும் கிணறாகவும் இருந்துள்ளது. பல வகையான சிறிய கிராமங்களின் இணைப்புதான் மாயன் நாகரீகம். இது ஒரு தனி ராஜ்ஜியம் அல்ல. யுகாடிகன் மாயன்களைன் வழிபாடுக் கோவிலே இந்த சிச்சன் இட்சாவில் உள்ள “குகுல்கன் பிரமிடு”. 9 இல் இருந்து 12ம் நூற்றாண்டுகளுக்கு இடையில் ஒரு விண்கல்லால் உருவான குழிக்கு வெளியே உருவாக்கப்பட்டுள்ளது இந்த கோவில். இங்கு இரண்டு கோவில்கள் ஒன்றன் மேல் ஒன்றாக உள்ளது. ஒன்று புதன் (Venus) கிரகத்தின் செயல்களையும், மேலே இருக்கும் கோவில், நிலாவின் (Lunar) செயல்களைக் கவனிக்கவும் கட்டப்பட்டுள்ளது.

Related Posts