மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவுவது நிறுத்தப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன்

Want create site? Find Free WordPress Themes and plugins.

கஜாபுயல் திசை மாறினால் நாளை மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவுவது நிறுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.

தொலைத் தொடர்பு, தொலையுணர்வு வழிகாட்டுதல் செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்கள் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. ஆனால், அதிக எடை கொண்ட செயற்கை கோள்களை விண்ணில் ஏவ மற்ற நாடுகளின் உதவியை இஸ்ரோ நாட வேண்டியுள்ளது. அதை மாற்றி அமைக்கும் வகையில் இந்திய விஞ்ஞானிகளின் நீண்ட கால உழைப்பில் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் தயாரிக்கப்பட்டது. இந்த ராக்கெட் 6 ஆயிரத்து 400 கிலோ எடை கொண்டது. இதன்மூலம் அதிகபட்சம் 4 ஆயிரம் கிலோ எடை உடைய செயற்கைக் கோள்களையும், விண்ணில் செலுத்த முடியும். பல கட்ட சோதனைக்கு பின்னர் கடந்த ஆண்டு ஜூன் 5-ந்தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் ஜிசாட் 19 செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. அடுத்த கட்டமாக அதிநவீன ஜிசாட் 29தொலைத்தொடர்பு செயற்கை கோள் மார்க்-3 ராக்கெட் மூலம் ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஏவு தளத்தில் இருந்து நாளை மாலை 5.08மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது. இதனையொட்டி இஸ்ரோ தலைவர் சிவன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், கஜா புயல் திசை மாறினால் மார்க்-3 ராக்கெட் விண்ணில் ஏவுவது நிறுத்தப்படும் எனவும்,  புயல் திசை மாறாவிட்டால் திட்டமிட்டப்படி நாளை ராக்கெட் விண்ணில் ஏவப்படும் எனவும் தெரிவித்தார். . சந்திராயன்-2 மனிதர்கள் பயணம் செய்யக்கூடிய ககன்யாங்க் ஆகிய ராக்கெட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts