மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேர் மீதும் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு

சட்ட விரோத தொலை பேசி முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேர் மீதும் சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டன.

சட்டவிரோதமாக பிஎஸ்என்எல் இணைப்புகளை பயன்படுத்தி, அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.  இந்த வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோரை விடுவித்து சிபிஐ நீதிமன்றம் கடந்த மார்ச் 14-ஆம் தேதி உத்தரவிட்டது. இதற்கு எதிராக சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாறன் சகோதரர்களை விடுவித்த நீதிமன்ற உத்தரவுக்கு தடைவிதித்தும், வழக்கை மீண்டும் விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் மாறன் சகோதரர்கள் உள்பட7 பேர் மீதும் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. குற்றச்சாட்டு பதிந்த பின் வழக்கு விசாரணை செப்டம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Related Posts