மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை

சென்னையில் 8 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டார்.

            மக்களவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழ்நாடு முழுவதும் 2 கட்டமாக நடைபெற்றது. இதில் சுமார் 6லட்சத்துக்கும் அதிகமான பேர் தங்களது பெயர்களை சேர்க்க மனு செய்துள்ளனர். சிறப்பு முகாம்களில் மட்டுமின்றி இணையதளத்திலும் விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் இன்று 8 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை நடத்தினார். மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், ஆணையர் மற்றும் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர்,திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்கள், உதவி தேர்தல் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பெயர் சேர்ப்பு,   சிறப்பு முகாம்களில் அரசியல் கட்சியினர்  அளித்துள்ள மனுக்களின் எண்ணிக்கை, இதில் தகுதியான மனுக்கள் எவ்வளவு போன்ற விவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Related Posts