மாவீரன் பிரபாகரனின் 64-வது பிறந்த நாள் தமிழகமெங்கும் கொண்டாட்டம்: மல்லை சத்யா

மாவீரன் பிரபாகரனின் பிறந்த நாளை ஒட்டு மொத்த தமிழர்களும் கொண்டாடிக் கொண்டிருப்பதாக மதிமுக துணைப் பொதுச் செய்யலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனின் 64-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் கேக் வெட்டி பொது மக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.,இந்த விழாவில் மதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் மல்லையா சத்தியா, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் மதிமுக நிர்வாகிகள் திரளானோர் கலந்துக்கொண்டனர், இந்நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மல்லையா சத்தியா, மாவீரன் பிரபாகரனின் 64 வது பிறந்தநாளை மதிமுக பொதுச் செயலாளர்  வைகோவின் சார்பில் கொண்டாடப்பட்டதாகவும்,தமிழீழம் மலர வேண்டும் என போராடிய தலைவரின் பிறந்தநாளை ஒட்டு மொத்த தமிழர்களும் கொண்டாடி கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய திருமுருகன் காந்தி, பிரபாகரனின் பிறந்த நாள் தமிழர்கள் சுயமரியாதை பெற்ற நாளாகவும்,எழுச்சி நாளாகவும், தமிழர்களை ஒன்று படுத்தும் நாளாகவும், உலக தமிழர்கள் எழுந்து நிற்கும் நாளாகவும், ஜனநாயக உறுதி மொழி ஏற்கும் நாளாகவும் உள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழ் இனத்தை வென்றெடுக்கும் நாளாக இன்றைய தினம் உள்ளதாகவும், தமிழர்களை ஒன்றுமையுடன் சாதி மதங்களை தவிர்த்து கொண்டாட கூடிய நாளாக விளங்குவதாகவும் திருமுருகன் காந்திகூறினார்.இதேபோல் சென்னை மேடவாக்கத்தில் உள்ள தமிழ்வழிக்கல்வி பள்ளியில் மாவீரன் பிரபாகரனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியில் நடிகர் சத்தியராஜ் .கலந்து கொண்டார்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் டிசம்பர் 24ஆம் தேதி எம்ஜிஆர் மற்றும் பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7பேரை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். முன்னதாக குழந்தைகளுடன் சத்தியராஜ் சிலம்பாட்டம் ஆடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

Related Posts