மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில், பா .ஜ.க எம்.எல்.ஏ சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்

தாந்தேவாடா சட்டமன்ற தொகுதி பாஜக எம்எல்ஏ பீமா மாந்தவி, பரப்புரையை முடித்துக் கொண்டு, குவாகொண்டா மற்றும் ஷியாம்கிரி இடையே, பாதுகாப்பு வாகனம் புடைசூழ, சென்று கொண்டிருந்தார்.

அப்போது, மரங்கள் நிறைந்த பகுதியொன்றில், பாஜக எம்எல்ஏ வாகனம் சென்றபோது, நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பில், வாகனங்கள் சிக்கி உருக்குலைந்தன.

இதில், பாஜக எம்எல்ஏ பீமா மாந்தவி, அவரது ஓட்டுநர், சிஆர்பிஎப் வீரர்கள் 3 பேர், உடல்சிதறி உயிரிழந்தனர். எம்எல்ஏ வாகனத்திற்கு முன்னால் சென்றுகொண்டிருந்த பாதுகாப்பு வாகனத்தில் இருந்த காவலர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த தகவல்களை உறுதிப்படுத்திய சிஆர்பிஎப் நக்சல் ஒழிப்புப் படை டிஐஜி சுந்தர் ராஜ், கொடூர நிகழ்விற்கு காரணமானவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

Related Posts