மிசோரம் முதலமைச்சராக ஜோரம்தாங்கா இன்று பதவியேற்றுக் கொண்டார்,அவருக்கு ஆளுநர் ராஜசேகரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மிசோரம் முதலமைச்சராக ஜோரம்தாங்கா இன்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ராஜசேகரன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானா, மிசோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், கடந்த 11 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. ஐந்து மாநிலங்களில் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. தெலங்கானாவில்டி.ஆர்.எஸ் கட்சியும், மிசோராமில்  மிசோ தேசிய முன்னணியும்  வெற்றி பெற்றன.. இதனையடுத்து மிசோ தேசிய முன்னணியின் தலைவர் ஜோரம்தாங்கா இன்று முதலமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில் பகல் 12 மணிக்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ராஜசேகரன் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.. இரண்டு முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ள ஜோரம்தாங்கா காங்கிரஸ் அரசை அகற்றி பத்தாண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts