மின்சார பேருந்துகள் இயக்கத்தின் போது தான் அதன் செலவை கணக்கிட முடியும் : போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர்

மின்சார பேருந்துகள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டு வருவதாகவும், அதன் இயக்கத்தின் போது தான் எவ்வளவு செலவு ஆகிறது என்பதை கணக்கிட முடியும் என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை சென்ட்ரலில் உள்ள மத்திய போக்குவரத்து பணிமனையில், 40 இருக்கைகள் வசதி கொண்ட மின்சாரப் பேருந்தை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நேற்று மின்சாரத்தால் இயங்கக்கூடிய முதல் பேருந்தை  முதலமைச்சர் தொடங்கி வைத்ததாகவும், இன்று மற்றொரு பேருந்தை சோதனை அடிப்படையிலான இயக்கத்தை தான் தொடங்கி வைத்திருப்பதாகவும் கூறினார்.மின்சாரப் பேருந்து சென்னை மட்டுமல்லாது கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Related Posts