மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், ஒப்புகை சீட்டு எந்திரத்தில் நம்பகத்தன்மை இல்லை  :எதிர்க்கட்சிகள் புகார்

இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களான கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் டெல்லியில் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அபிஷேக் மனு சிங்வி, முதல்கட்ட மக்களவை தேர்தலுக்குப் பின் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளதாக கூறினார்.

ஒரு கட்சிக்கு வாக்களித்தால், மற்றொரு கட்சிக்கு அந்த வாக்கு செல்வதாகவும், ஒப்புகை சீட்டுகளை 7 நொடிகளுக்குப் பதில் வெறும் 3 நொடிகள் மட்டுமே பார்க்க முடிவதாகவும் குறிப்பிட்டார்.

எனவே இந்த விவகாரத்தை சட்டப்பூர்வமாக அணுக முடிவு செய்திருப்பதாக அபிஷேக் மனு சிங்வி தெரிவித்தார்.

Related Posts