மின் ஊழியர்கள் தேவை – கே.ஜெ.அல்போன்ஸ்

கேரளாவுக்கு அதிக மின் ஊழியர்கள் தேவைப்படுவதாக மத்திய அமைச்சர் கே.ஜெ.அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

கேரளவில் பெய்த தொடர் மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகள் வெள்ளக்காடானது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாகின. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை சுமார் 400 பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமான மக்களை காணவில்லை என கூறப்படுகிறது. சுமார் 8 லட்சம் பேர் மீட்கப்பட்டு, 5 ஆயிரத்து 645 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றனர். முகாம்களில் 5ஆவது நாளாக உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. பல்வேறு மாநிலங்களும் கேரளாவுக்கு உதவி கரம் நீட்டி வருகிறது. மீட்புப் பணிகள் ஒருபுறம் தொடர்ந்து நடந்து வந்தாலும், நிவாரணம் வழங்கும் பணிகளுடன் சீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றன. கடந்த2 நாட்களாக கேரளாவில் பல பகுதிகளில் மழை ஓய்ந்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளதை அடுத்து மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இதனிடையே டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கே.ஜெ.அல்போன்ஸ், கேரளாவில் கனமழை, வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மின்கம்பங்கள் உள்ளிட்டவைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும்,  உணவு, உடையை விட கேரள மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப நூற்றுக்கணக்கான மின் ஊழியர்கள்,, பிளம்பர்கள், தச்சர்கள் தேவைப்படுவதாகவும், மீட்புப் பணியில் உயிரையும் பொருட்படுத்தாமல் அதிக அளவிலான மீனவர்கள்ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தான் உண்மையான ஹீரோக்கள் எனவும் அவர் கூறினார்.

Related Posts