மியன்மாரில் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

மியன்மார் நாட்டில் ஹாகந்த் அருகே  கயின் சௌங் என்ற கிராமத்தில் உள்ள சுரங்கத்தில் நேற்று 2 மணியளவில்  திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது, சுரங்கத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் நிலச்சரிவில் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற பேரிடர் மீட்பு குழுவினர் உயிரிழந்த நிலையில் 18 பேரை மீட்டனர். அதனைதொடர்ந்து 2 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts