மியான்மர் ஏர்லைன்ஸ் விமானம் பழுது: சாதுரியமாக செயல்படட விமானியால் உயிர்சேதம் தவிர்ப்பு

89 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் மியான்மர் ஏர்லைன்ஸ் விமானமானது மாண்டலே நகர் சென்றது. தரை இறக்கத்தின் போது முன் பக்க லேண்டிங் கியர் வேலை செய்யவில்லை. இரண்டு முறை முயற்சி மேற்கொண்ட போதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முன் பக்க சக்கரம் வெளியே வராததால் பின்பக்கம் இருக்கும் சக்கரங்கள் உதவியுடன் மட்டுமே தரை இறக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இதை அடுத்து விமானி சாதுரியமாக செயல்பட்டு பின் பக்க சக்கரங்கள் மூலம் விமானத்தை தரை இறக்கினார். விமானம் தரை இறங்கியதும் பயணிகள் அனைவரும் பத்திரமாக வெளியேறினர்.

Related Posts