மீட்கப்பட்ட நடராஜர் சிலையை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்கப்பட்ட நடராஜர் சிலையை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் கல்லிடைகுறிச்சி குலசேகரமுடையார் சிவன் கோவிலில் திருடப்பட்ட நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் மீட்கப்பட்டது. அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி கொண்டுவரப்பட்ட நடராஜர் சிலை, அங்கிருந்து ரயில் மூலமாக கடந்த 13ம் தேதி சென்னை வந்தடைந்தது. நடராஜர் சிலைக்கு மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த நிலையில், தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சிலை கடத்தல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடராஜர் சிலை ஒப்படைக்கப்பட்டது. கல்லிடைக் குறிச்சி கோயிலில் இருந்து நடராஜர் சிலை மட்டும் அல்லாது, சிவாகாமி அம்மாள், விநாயகர் சிலை, மூலவர் சிலை உட்பட 15-க்கும் மேற்பட்ட சிலைகள் கடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts