மீண்டும் அணு ஆயுதப் போர் எச்சரிக்கையை விடுத்தார் இம்ரான் கான்

காஷ்மீர் விவகாரத்தில் மீண்டும் ஒருமுறை இம்ரான் கான் அணுஆயுதப் போர் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

மத்திய அரசு  காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்ட பிரிவை ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனாவின் உதவியுடன் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சி தோல்வியை தழுவியது. இதனையடுத்து சர்வதேச நீதிமன்றத்தை நாட உள்ளதாக பாகிஸ்தான் அறிவித்தது.

இந்த விவகாரத்தில் சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரும் பாகிஸ்தான் முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

பயங்கரவாதத்தைக் கைவிட்டால் மட்டும் பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்று இந்தியா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்தது. இதற்கிடையே அணுஆயுதப் போர் வெடிக்கும் என்ற தொனியில் தொடர்ந்து இம்ரான் கான் பேசிவருகிறார். மீண்டும் அதுபோன்று எச்சரிக்கையை விடுக்கும் வகையில் பாகிஸ்தான் மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தான் தீர்க்கமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்றும் கூறினார்.

Related Posts