மீண்டும் சிக்கிய நித்யானந்தா : கனடா நாட்டு பெண் குற்றம்சாட்டு

நித்யானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர் அடித்து துன்புறுத்தப்படுவதாக கனடா நாட்டு பெண் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

கனடா நாட்டைச் சேர்ந்த சாரா லேண்டரி என்ற பெண் நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் தங்கி பணியாற்றி வந்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டு நித்யானந்தாவிடமிருந்து விலகி கனடா சென்ற அந்தப் பெண், தற்போது ஆசிரமத்தின் மீது பல அதிர்ச்சியூட்டும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து யூடியூபில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தனித் தனியாக தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர், சிறுமியர் அடித்து துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அடித்து துன்புறுத்தப்படுவதை வெளியில் சொல்வது குரு துரோகம் என குழந்தைகள் மிரட்டப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். சிறுவர் சிறுமியருக்கு நடக்கும் கொடுமை குறித்து நித்யானந்தாவின் பிரதான சீடர்களில் ஒருவரான ரஞ்சிதாவிடம் புகார் தெரிவித்தபோது, அதை அவர் நிராகரித்ததாகலும் கனடாவைச் சேர்ந்த சாரா லேண்டரி கூறியுள்ளார்.

Related Posts