மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அழைப்பு 

கடந்த மார்ச் 23ம் தேதி பாகிஸ்தான் தேசிய தினத்தையொட்டி, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். அதில், தீவிரவாதம் வன்முறை இல்லாத சூழலில், ஜனநாயகம், அமைதி, வளர்ச்சி, செழுமை ஆகியவற்றுக்காக தெற்காசிய மக்கள் இணைந்து பணியாற்ற வேண்டிய தருணம் இது என்று மோடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது அவசியம் என்று கூறியுள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், பேச்சுவார்ததைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related Posts