மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட தடை விதித்திருப்பது கண்டிக்கதக்கது

மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட தடை விதித்திருப்பது கண்டிக்கதக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் சிறப்பு நீதிமன்றம் திறக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாக கூறினார். ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஆட்சியாளர்கள், அவர்கள் மீது தவறு இல்லை என்பதை மக்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையத்தால்  தடுக்க முடியாவிட்டால் அதை விட அதிகாரம் பொருந்திய புது ஆணையத்தை அமைக்க வேண்டும் என கூறினார். மீத்தேன் திட்டத்திற்கு எதிராக போராட தடை விதித்திருப்பது கண்டிக்கதக்கது என கூறிய ஜி.கே.வாசன், மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளிக்ககூடாது என வலியுறுத்தினார். மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், அதற்கு அன்றாடம் தொலைக்காட்சிகளில் வரும் செய்திகளே சாட்சி எனவும் அவர் கூறினார்.

Related Posts