மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோகார்பன் எடுக்கப்போவதில்லை : ஓ.என்.ஜி.சி. நிறுவனம்

தமிழகத்தில் மீத்தேன், ஷேல் கேஸ், ஹைட்ரோகார்பன் ஆகியவற்றை இதுவரை எடுக்கவில்லை என்றும், இனியும் எடுக்கப்போவதில்லை என்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் 9 ஸ்மார்ட் வகுப்பறைகளை அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நிதியுதவி அளித்துள்ளது. இந்த வகுப்பறைகளை தொடங்கி வைக்கும் விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒ.என்.ஜி.சி. செயல் இயக்குனர் ஷியாம் மோகன், தங்களுக்கு மீத்தேன், ஷேல்கேஸ், ஹைட்ரோ கார்பன் ஆகியவற்றை எடுக்க எந்த அனுமதியும் அளிக்கப்படவில்லை என்றார். இயற்கை வாயு, குருடு ஆயில் ஆகியவற்றைத் தான் எடுப்பதாகவும், இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.  வெளிநாடுகளில் தீப்பிடித்து எரியும் காட்சிகளை தமிழக ஓ.என்.ஜி.சி. நிறுவனங்களுடன் இணைத்து சித்தரித்து சமூகவலைதளங்களில் வெளியிடப்படுவதாகவும், அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் ஷியாம் மோகன் கூறினார்.

Related Posts