மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்-மேதா பட்கர்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நிலத்தடி நீரை உயர்த்த மழைநீர் சேகரிப்பு திட்டம் முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

 

நீர் மேலாண்மையை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

 

பூமிக்கு அடியில் இருந்து எடுக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறிய அவர், இயற்கை வளங்களை பாதுகாக்க  காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட பசுமை தீர்ப்பாயங்கள், அமைப்புகள் ஆகியவற்றை தற்போது செயல்பட விடாமல் தடுக்கப்படுவதாக குற்றச்சாட்டினார்.

Related Posts