மீனவர்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்மேற்கு அரபிக்கடலில் காற்றழுத்தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை : மே-15

தென்மேற்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Posts