மீனவர்களை பழங்குடியினர் பட்டியல் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றித்தரப்படும்: திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக சார்பில்  போட்டியிடும் கனிமொழி, தூத்துக்குடி மாநகர பகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் வீதிவீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைந்தால் மாணவர்களுக்கான கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என்று கூறினார். 

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களை பழங்குடியினர் பட்டியல் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றித்தரப்படும் என்று அவர் கூறினார்.

Related Posts