மீனவர்கள் அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம் எச்சரிக்கை

 

 

தென்மேற்கு அரபிக் கடல் பகுதிக்கு வரும் 23ஆம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணிநேரத்தில் தென்மேற்கு அரபிக்கடலில் உருவான வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறும் என்று கூறினார். இதனால், நாளை மறுநாள் வரை மீனவர்கள் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும் தென் தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் ஒரிரு இடங்களில் மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

Related Posts