மீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தம்

தடையை மீறி தங்குகடல் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடி நாட்டு படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்றை வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர்.

தூத்துக்குடி மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து, மீன்வளத்துறையின் அனுமதியின்றி தங்குகடல் மீன்பிடி தொழிலுக்கு 32 விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாட்டுப்படகு மீனவர்கள் திரேஸ்புரம் பஞ்சாயத்தில் ஒன்று கூடி, தங்குகடல் சென்று மீன்பிடித்து வரும் மீன்களை பறிமுதல் செய்ய வேண்டும், விசைப்படகு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வதாக தெரிவித்தனர்.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள, விசைப்படகு உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீனவர்கள் கரை திரும்பியவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Related Posts