மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள்: சந்தீப் நந்தூரி

இலங்கையில் சிறையில் வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

      தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தாமிரபரணி புஷ்கர விழா தூத்துக்குடி மாவட்டத்தில் 27 இடங்களில் நடைபெற்று வருவதாகவும், விழா நடைபெறும் அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 90சதவீத அளவுக்கு தாதுப் பொருட்கள் வெளியேற்றப்பட்டுவிட்டதாக கூறினார். மேலும், இலங்கை சிறையில் வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், 8 பேரும் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கபடுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts