மீனவர் பிரச்சனை தொடர்பாக இலங்கை அமைச்சர்களை சந்தித்து கனிமொழி பேச்சுவார்த்தை

இலங்கை சென்றுள்ள திமுக எம்பி கனிமொழி, தமிழக மீனவர் பிரச்சனை தொடர்பாக இலங்கை அமைச்சர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கு சுமுக தீர்வு ஏற்படுத்தும் விதமாக, திமுக எம்.பி. கனிமொழி மற்றும் ராமநாபுரம் எம்.பி. நவாஸ் கனி ஆகியோர் இலங்கை சென்றுள்ளனர். அவர்கள் அந்நாட்டு கடல் சார் அமைச்சர்கள் திலிப், அமீர் அலி, ஸாஹிர் மவுலான ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மீனவர் பிரச்சனை குறித்து இந்த ஆண்டின் இறுதியில் மாநாடு நடத்தவும், அதில், மீனவர்கள் தாக்கப்படாமல் இருக்க சுமுக உடன்பாடு ஏற்படுத்தவும் பேச்சுவார்த்தையில் திட்டமிடப்பட்டது.

Related Posts