மீன்தூள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விதித்துள்ள 5% GST வரியை மறுபரிசீலனை செய்ய கோரிக்கை

மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மீன்தூள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விதித்துள்ள 5% GST வரியை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு உரிமையாளர், தொழிலாளர்கள், மற்றும் வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பாக தூத்துக்குடியில் உள்ள தனியார் ஹோட்டல் கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் அந்தோணியப்பா தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  அகில இந்திய மீன்தூள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு தங்களுடைய முழுமையான ஆதரவை தெரிவிப்பதாக கூறினார். மீனவர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மீன்தூள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு விதித்துள்ள 5% GST வரியை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

Related Posts