முகத்துவாரத்தை தூர்வார வேண்டி புதுச்சேரி மீனவர்கள் வலியுறுத்தல்

புதுசேரியில் படகுகள் சேதமடைவதற்கு காரணமாக உள்ள முகத்துவாரத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாகராஜ் என்பவர் 5 பேருடன் கடலில் மீன்பிடிக்க சென்று கொண்டிருந்தார். அப்போது படகு திடீரென தரை தட்டி விபதுக்குள்ளானது. இதையறிந்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக சென்று கடலில் மூழ்கிக் கொண்டிருந்த படகை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து பேசிய மீனவர்கள், முகத்துவாரம் தூர்வாரப்படாததே விபத்துக்கு காரணம் என்று கூறினர். சேதமடைந்த படகின் மதிப்பு 20 லட்சம் ரூபாய் என்றும், அதனை அரசு இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.

Related Posts