முகம் பொலிவுபெற க்ரீன் டீயை இப்படி பயன்படுத்துங்கள்!

க்ரீன் டீ, குடிப்பதற்கு மட்டுமல்ல. முகத்தில் உள்ள பருக்களையும். நிறக்குறைபாடுகளையும் நீக்கும் ஒரு மருத்துவ குணம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்த க்ரீன் டீயுடன் ஒரு சில பொருட்களை உபயோகப்படுத்தி நம் சருமத்தை அழகாக பராமரிக்கலாம்.

தேவையானவை:

க்ரீன் டீ

முல்தானி மிட்டி

ஆப்பிள் சைடர் வினிகர்

ஃப்ரங்கின்சன் எசன்ஷியல் ஆயில் – 5 துளிகள்

லாவண்டர் எசன்ஷியல் ஆயில் – 5 துளிகள்

செய்முறை:

சம அளவு க்ரீன் டீ, முல்தானி மிட்டி, ஆப்பிள் சைடர் வினிகருடன் ஃப்ரங்கின்சன் எசன்ஷியல் ஆயில் – 5 துளிகள் மற்றும் லாவண்டர் எசன்ஷியல் ஆயில் – 5 துளிகள் சேர்த்துக் கலந்து கொள்ளவும். ஓரளவு திடமான பதத்திற்கு வரும் வரை முல்தானி மிட்டியைச் சேர்க்கவும்.

முகத்தில் தடவி 20 நிமிடத்திற்குப் பிறகு கழுவி விடவும்.

இந்த கலவை, சருமம் மிகவும் பளபளப்பாகவும் மென்மையாகவும் இருக்க உதவுகிறது.

இதனை வாரத்திற்கு ஒரு முறை செய்தாலே போதும். முழுமையான பலனை இரண்டு மாதங்களிலேயே அடையலாம்.

Related Posts